பதிவு செய்த நாள்
14
ஜூலை
2014
12:07
சேலம்: சேலம், கோட்டை பெருமாள் கோவில், ஆஞ்சநேய ஸ்வாமி பஜனைக் குழுவின், 31ம் ஆண்டு விழாவை முன்னிட்டு, நேற்று ஆஞ்சநேயருக்கு, ராஜ அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது. சேலம், கோட்டை பெருமாள் கோவில், ஆஞ்சநேய ஸ்வாமி பஜனைக் குழுவின், 31ம் ஆண்டு விழாவை முன்னிட்டு, நேற்று காலை, பெருமாள், தாயார், ஆஞ்சநேய ஸ்வாமி ஆகியோருக்கு, ராஜ அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தது. ஆஞ்சநேய ஸ்வாமி பஜனைக் குழுவினரின், சிறப்பு இன்னிசை கச்சேரி நடந்தது.தொடர்ந்து நடந்த அன்னதானம், சிறப்பு பூஜைகளில், திரளாக பக்தர்கள் கலந்து கொண்டனர்.