உளுந்தூர்பேட்டை: பாதூர் பகுதியிலுள்ள திரவுபதியம்மன் கோவில் விழாவில் பக்தர்கள் தீமிதித்தனர். உளுந்தூர்பேட்டை அடுத்த பாதூர் திரவுபதி யம்மன் கோவில் தீமிதி திருவிழா நடந்தது. இதையொட்டி கடந்த 15 நாட்களுக்கு முன் காப்பு கட்டுதலுடன் விழா துவங்கி தினசரி இரவு நேரத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. மாலை 5 மணிக்கு சக்தி கரகம் அழைத்தலுடன், மாலை 6 மணிக்கு பக்தர்கள் வேண்டுதல் நிறைவேற்ற தீமிதித்தனர். இரவு திரவுபதியம்மன் சுவாமி சிறப்பு அலங்காரம் செய்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.