பெரியபாளையத்தம்மன் கோயிலில் ஆகஸ்ட் 7ல் கும்பாபிஷேகம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஆக 2014 04:08
அரக்கோணம்: சுவால்பேட்டையில் டபிள்யூ.முனுசாமி தெருவில் பெரியபாளையத்தம்மன் கோயில் உள்ளது. கடந்த 57 வருடங்களாக உள்ள இக்கோயிலில் வருடம்தோறும் ஆடித் திருவிழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.இந்த ஆண்டு ஆடித்திருவிழாவும், கோயிலின் மஹா கும்பாபிஷேகமும் இணைந்து நடைபெற உள்ளன. இதற்காக கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த கோயில் திருப்பணிகள் முடிவடைந்துள்ளன.மஹா கும்பாபிஷேக பூஜைகள் ஆகஸ்ட் 5 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை கணபதி பூஜையுடன் துவங்குகிறது.ஆகஸ்ட் 7ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் பரிவார மூர்த்திகளுக்கும், மூலவர் அம்மனுக்கும் மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. 108 திருவிளக்கு பூஜை 8ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. இதையடுத்து ஆடித் திருவிழா கூழ்வார்த்தல் 10ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலையும், அம்மன் திருவீதி உலா மாலையும் நடைபெற உள்ளன.இதற்கான ஏற்பாடுகளை கோயில் விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.