கந்த சஷ்டி விழா; வேடன் அலங்காரத்தில் அருள்பாலித்த மூலவர் முருகன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25அக் 2025 12:10
கோவை; கோவை காட்டூர் அருள்மிகு விநாயகர் - சுப்ரமணியர் - மாரியம்மன் கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 22ம் தேதி துவங்கி தினமும் காலை 9 மணிக்கு சத்குரு சம்ஹார ஹோமம் நடைபெறுகிறது. தொடர்ந்து காலை 10:30 மணியளவில் அபிஷேகமும் மகா தீபாராதனையும் நடைபெறும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வானது வரும் 27ம் தேதி வரை நடைபெறுகிறது. இன்று நடைபெற்ற வழிபாட்டில் மூலவர் முருகன் வேடன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.