கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் ஆடி களப பூஜை தொடக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஆக 2014 04:08
கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி களப பூஜை தொடர்ந்து 12 நாள்கள் நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு திங்கள்கிழமை (ஆகஸ்ட் 4) தொடங்கி ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.இதில், முதல் நாளில் நடைபெற்ற பூஜையில், திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் பங்கேற்றார். தங்க குடத்தில் நிரப்பப்பட்ட களபம், சந்தனம், பச்சைக்கற்பூரம், ஜவ்வாது, கோரோசனை உள்ளிட்ட வாசனைத் திரவியங்களை அவர் எடுத்து வந்தார். இதைப் பெற்றுக் கொண்ட மாத்தூர் மடம் தந்திரி சங்கர நாராயணரூ பூஜைகளை நடத்தினார்.2ஆம் நாள் பூஜை தொடங்கி, நிறைவு நாள் வரை வெள்ளிக் குடத்தில் வாசனை திரவியங்களை நிரப்பி பூஜை நடைபெறும். 12ஆம் நாள் இரவு புஷ்பாபிஷேகம் நடைபெறும். விழா ஏற்பாடுகளை குமரி மாவட்ட தேவசம் போர்டு இணை ஆணையர் இரா.ஞானசேகர், கோயில் மேலாளர் சோனாச்சலம் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.முன்னதாக பகவதியம்மன் கோயிலுக்கு வந்த திருவாவடுதுறை ஆதீனத்தை வள்ளலார் பேரவைத் தலைவர் சுவாமி பத்மேந்திரா, கன்னியாகுமரி ஆதீன மடத்தின் ஆய்வர் பி. ஆறுமுகம், பகவதியம்மன் பக்தர்கள் சங்கச் செயலர் பி. முருகன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.