ஆரணி புதுகாமூர் பகுதியில் உள்ள பெரியநாயகி சமேத புத்திரகாமேட்டீஸ்வரர் சிவன் கோவிலில் சுந்தர மூர்த்தி நாய னார் குருபூஜையை முன் னிட்டு லட்ச தீப விழா நடை பெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீபம் ஏற்றி தரிசனம் செய்தனர். அன்ன தானமும் வழங்கப்பட்டது. நேற்று காலையில் உற்சவர் சுவாமியை மலர்களால் அலங் கரித்து நகரின் முக்கிய வீதி களின் வழியாக திருவீதி உலா நடைபெற்றது.ஆரணி அடுத்த முனுகப் பட்டு கிராமத்தில் மன்னார் சாமி சமேத பச்சையம்மன் கோவி லில் ஆடி 3–வது சோம வார விழாவையொட்டி அதி காலையில் சாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்து தங்க கவசம் அணிவித்து மகா தீபாராதனை நடைபெற்றது. உற்சவர் சாமிக்கு சிறப்பு அபிஷேகமும் நடத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் நேர்த்தி கடன் வேண்டி மொட்டை அடித்து கோழி, ஆடு பலியிட்டு பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர். மாலையில் உற்சவர் அம்மனை மீனாட்சி அலங்காரத்தில் அலங்கரித்து புஷ்ப பல்லக்கில் வைத்து கிராமம் முழுவதும் வாண வேடிக்கையுடன் வலம் வந்தனர்.