வைகுந்தநாத பெருமாள் கோயிலில் ஆகஸ்ட் 22-ல் குடமுழுக்கு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஆக 2014 05:08
திருக்கோவிலூர் அருகே மையனூர் கருடமலையில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ஸ்ரீவைகுந்தநாத பெருமாள் கோயில் குடமுழுக்கு விழா ஆகஸ்ட் 22-ம் தேதி நடைபெறுகிறது.விழாவையொட்டி, 21-ம் தேதி காலை 10.30 மணிக்கு கணபதி ஹோமம், ஸ்ரீமகாலஷ்மி ஹோமம், உள்ளிட்ட யாகங்கள் நடைபெறுகின்றன. மாலை 2-ம் கால பூஜை நடைபெறுகிறது. 22-ம் தேதி காலை 5 மணிக்கு மூன்றாம் கால பூஜை நடைபெறுகிறது. காலை 9 மணிக்குமேல் 10.30 மணிக்குள் மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.திருக்கோவிலூர்-சங்கராபுரம் பிரதான சாலையில் பகண்டை கூட்டுச் சாலையில் இருந்து பிரிந்து மையனூர் செல்லும் சாலையில் 9 கி.மீ. தொலைவிலும், கள்ளக்குறிச்சியில் இருந்து அகரகோட்டாலம், மணிமுக்தா அணை, பழையசிறுவங்கூர் வழியாக சங்கராபுரம் செல்லும் சாலையில் 14 கி.மீ. தொலைவிலும் இக்கோயில் அமைந்துள்ளது. இந்த வழித்தடங்களில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.