விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஆக 2014 05:08
மயிலாடுதுறை: அருகே விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரம்இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி வருகிற 29-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு மயிலாடுதுறை அருகே மணக்குடி கிராமத்தில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து மணக்குடியை சேர்ந்த பழனிவேல் கூறியதாவது:-இங்கு தயாரிக்கப்படும் சிலைகள் நாகை, திருவாரூர், தஞ்சை, காரைக்கால் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களுக்கும் ஏற்றுமதி ஆகிறது. மாசு கட்டுப்பாட்டு வாரியம் கூறிய அறிவுரையின்படி மரக்கூழ்களாலும், ரசாயனக் கலவையற்ற வண்ணங்களாலும் பூசி விநாயகர் சிலைகளை உருவாக்கி வருகிறோம். சுமார் 2 அடி முதல் 15 அடி உயரம் வரை மான், பசு, பிறை நிலா, சங்கு, எலி உள்ளிட்ட வாகனங்களில் அமர்ந்துள்ளது போன்ற விநாயகர் சிலைகளை தயாரித்து வருகிறோம். இந்த பணி கடந்த 3 மாதங்களாக நடைபெற்று வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.