பதிவு செய்த நாள்
06
ஆக
2014
11:08
திருமண தடைகளை எல்லாம் போக்கி, திருமணத்தை உரிய காலத்தில் நினைத்தபடி நடத்தி மகிழ்வு அடைய வகை செய்யும் சிறுவாபுரி பாலசுப்ரமணிய சுவாமி கோவிலை நாடினால் பலன் உண்டாகும். இக்கோவில், சென்னைக்கு அருகே. 35 கி.மீ., தொலைவில், சென்னை-கோல்கட்டா நெடுஞ்சாலையில் சின்னம்பேடு கிராமத்தில் அமைந்துள்ளது.
திருமண பிரார்த்தனை நிறைவேற, சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு தொடர்ந்து, 6 வாரமும் ஏதாவது ஒரு கிழமையில் வரவேண்டும். அப்படி ஆறு வாரமும் வரமுடியாத பக்தர்களுக்காக, வள்ளி மணவாள பெருமானுக்கு கல்யாண மஹோற்சவம் நடைபெறும். திருமண பிரார்த்தனைக்காக வந்துள்ள ஆண்களுக்கும், பெண்களுக்கும், மணக்கோலத்திலுள்ள வள்ளி மணவாள பெருமான் முன்னிலையில் தரப்படும் மாலையை, திருமண மாலையாக கருதி அணிந்து கொண்டு. வலம் வரும் சுவாமியை பின் தொடர்ந்து வந்து வழிபட வேண்டும்.
இந்த பிரார்த்தனையை சிரத்தையுடன் முடித்துவிட்டு செல்பவர்களுக்கு. அடுத்த கல்யாண மஹோற்சவத்திற்குள். திருமணம் கைகூடுவது நிதர்சனமான உண்மை. இந்த வகையில், வரும் ஆகஸ்ட் 10ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வள்ளி கல்யாண மஹோற்சவம், சிறுவாபுரி முருகன் புகழ்பாடும் அண்ணாமலையார் ஆன்மிக வழிபாட்டு குழுவின் ஐந்தாம் ஆண்டு விழாவையொட்டி நடக்கிறது.
இக்குழுவினர், கடந்தாண்டு நடத்திய வள்ளி கல்யாண மஹோற்சவத்தில் பங்கேற்று, திருமணம் கைகூடியவர்கள், கடிதம் மூலமாகவும், தொலைபேசி வாயிலாகவும் மகிழச்சியை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
வரும் ஆகஸ்ட் 10ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, நடைபெறும் கல்யாண மஹோற்சவம் காலை 9 மணிக்கு அபிஷேகத்துடன் துவங்குகிறது; திருமண பிரார்த்தனைக்காக வருபவர்கள், கோவிலின் இடவசதியை கருத்தில் கொண்டு, காலை 7 மணிக்குள் கோவிலுக்கு வந்தால், ஏற்பாடுகள் செய்வதற்கு வசதியாக இருக்கும். விழாவில் பங்கேற்கும் பக்தர்களுக்கு அன்னதானத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நிகழ்ச்சி நிரல்!
காலை
6 மணி : விநாயகர், ஆதிமூலவர் அண்ணாமலையார் அம்மன் அபிஷேகம்
6.30மணி : மூலவருக்கு அபிஷேகம்
7.30மணி : சிற்றுண்டி
9. மணி : வள்ளிமணவாள பெருமானுக்கு அபிஷேகம்
10 மணி : திருக்கல்யாணம்
11 மணி : சுவாமி புறப்பாடு
மதியம்
12. மணி கல்யாண விருந்து
கோசை நகரான் திருகயிலாய திருக்கூட்டம்- சிவப்பூத கணங்கள் இசைக்கும் திருக்கயிலாய இசை
மேலும் தகவல்களுக்கு: 044-24712173, 9940625308
அண்ணாமலையார் ஆன்மிக வழிபாட்டு குழு, சென்னை