சேலம்: குகை, மாரியம்மன் கோவில் ஆடிப்பண்டிகை சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று இரவு வண்டிவேடிக்கை நிகழ்ச்சி நடந்தது. அதில் சூரனை வதம் செய்த சுப்ரமணி, திருத்தனி தணிகை மலையில்வள்ளி, தெய்வானையுடன் காட்சிளிப்பது போல் பக்தர்கள் வேடமிட்டு வந்தனர். 109ம் ஆண்டாக, சிவபெருமான் படியளந்த காட்சியாக சிவன், பார்வதி, முருகன் வேடமிட்டு ஊர்வலமாக வந்த காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.