திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் மேலவீதி கங்கையம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா நடந்தது. திருக்கோவிலூர், மேலவீதியில் உள்ள க ங்கையம்மன் கோவிலில் கடந்த மாதம் 29ம் தேதி காப்பு கட்டுதலுடன் சாகை வார்த்தல் விழா துவங்கியது. நேற்று காலை 9 மணிக்கு தென்பெண்ணை ஆற்றில் சக்தி கரகம் புறப்பட்டு கோவிலை அடைந்தது. பக்தர்கள் அலகு குத்தி தேர் இழுத்தனர். 108 காவடி வேல் குத்தியும் வீதியுலா நடந்தது. மூலவர் கங்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனையும், பகல் 1.00 மணிக்கு சாகை வார்த்தல் நடந்தது. இரவு அம்மன் வீதியலா நடந்தது. இதையடுத்து கும்பம் சாற்றும் வைபவம் நடந்தது.