ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் திரவுபதி அம்மன் கோயில் பூக்குழி விழா ஆக.,1ல் காப்புகட்டுதலுடன் துவங்கியது. சக்தி கரகம், தர்மர் பிறப்பு, கிருஷ்ணர் பிறப்பு நிகழ்வுகள் நடந்தன. விழாவின் 10 ம் நாளில் சிலுகவயல் கிராமத்தாரின் மண்டகப்படியில் திருக்கல்யாணம் நடந்தது. பின், திரவுபதி, தர்மர் மணகோலத்தில் அருள்பாலித்தனர். இந்து பேரவை தலைவர் தினகரன், புல்லமடை ஊராட்சி தலைவர் கோட்டைசாமி கலந்து கொண்டனர். பூக்குழி விழா ஆக.,22ல் நடக்க உள்ளது.