Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஐயப்பனை தரிசிப்பதற்காக .. ... மதுரை இஸ்கான் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலம்! மதுரை இஸ்கான் கோயிலில் கிருஷ்ண ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாகராஜா கோயிலில் பெண்கள் பால் ஊற்றி வழிபாடு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

18 ஆக
2014
10:08

நாகர்கோவில்: நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோயிலில் ஆவணி ஞாயிறு விழாவை ஒட்டி ஆயிரக்கணக்கான பெண்கள் நாகருக்கு பால் ஊற்றி வழிபாடு நடத்தினர். நாகரை மூலவராக கொண்டு தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்ட தலைநகர் நாகர்கோவிலில் அமைந்துள்ளது நாகராஜாகோவில். இந்த பெயரில்தான் நாகர்கோவில் ஊர் பெயரும் அமைந்துள்ளது. கோயில் பெரியதாக இருந்தாலும் நாகர் பிரதிஷ்டை இன்னும் ஓலைக் கூரையில்தான் அமைந்துள்ளது. இங்குள்ள புற்றில் இருந்து வரும் மண்தான் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இப்படி சிறப்பு பெற்ற நாகராஜா கோயிலில் ஆவணி மாதம் ஞாயிற்றுக் கிழமை விசேஷ தினமாகும். இந்த நாளில் நாகருக்கு பால் அபிஷேகம் நடத்தினால் ராகு- கேது தோஷம் நீங்கும், திருமண தடை நீங்கும், திருமணமான பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும், தோஷங்கள் அனைத்தும் விலகும் என்பது பக்தர்களின் குறிப்பாக பெண்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. இந்த ஆண்டு முதல் ஆவணி ஞாயிறு மற்றும் ஒன்றாம் தேதி என்பதால் நேற்று அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகளவு இருந்தது. தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளாவில் இருந்தும் ஆயிரக்கணக்கான பெண்கள் நீண்ட வரிசையில் நின்று நாகருக்கு பாலபிஷேகம் நடத்தி வழிபாடு நடத்தினர்.

தொடர்புடைய கோயில்கள் :
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளியதை தொடர்ந்து அழகரைகுளிர்விக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வீர அழகர் வைகை ... மேலும்
 
temple news
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் பெருமாள் ... மேலும்
 
temple news
பட்டிவீரன்பட்டி; சித்தரேவு வரதராஜபெருமாள் கோவில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் ஏப்.20ல் நடந்தது. ... மேலும்
 
temple news
தேனி; போடிநாயக்கனூர் கொட்டகுடி ஆற்றில் ஸ்ரீரங்கம் வைணவ முறைப்படி செவ்வாய்க்கிழமை தமிழ் புத்தாண்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar