பதிவு செய்த நாள்
23
ஆக
2014
02:08
கும்பகோணம் :கும்பகோணத்தை அடுத்த திருவலஞ்சுழி வெள்ளை விநாயகர் கோவிலில், விநாயகர் சதுர்த்தி விழா, கொடியேற்றத்துடன் தொடங்கியது. கி.பி.4 ம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்ததும், சோழர்கால அரசர்களான ராஜராஜசோழன், ராஜேந்திர சோழன் ஆகியோர் திருப்பணி செய்த தலமாக விளங்குவது, திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் திருக்கோயிலாகும்.ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி அன்று, வெள்ளை விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெறும். ஒன்றரை அடி உயரமுள்ள இந்த வெள்ளை விநாயகர், கடல் நுரையால் ஆனதால், எப்போதும் அபிஷேகம் கிடையாது.அலங்காரம் மட்டும் தான். இத்தகைய சிறப்புபெற்ற இக்கோவிலில், விநாயகர் சதுர்த்தி விழா நேற்று முன்தினம் காலை, 7.45 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது.ஆகஸ்ட், 29ம் தேதி வரை, தினமும் இரு வேலை ஸ்வாமி வீதிவுலா நடைபெறம். வரும், 27 ம் தேதி மாலை திருக்கல்யாணமும், 29ம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று, காலை, 7 மணிக்கு தேவேந்திரன் பூஜையும், 9 மணிக்கு திருத்தேரோட்டம் நடைபெற உள்ளது.விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.