Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஓண பூமியின் வீரமங்கை! அட்டா பூவின் மாநாடா!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
வெற்றி தோல்வி வந்து போகும்..ஆனால் முயற்சி நிரந்தரமானது!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 செப்
2014
02:09

உலகில் கடவுள் ஒருவர் இருக்கிறார் என்பது மட்டுமே உண்மை. மற்ற அனைத்துமே பொய். கடவுள் எங்கும் நிறைந்திருக்கிறார். எப்போதும் அவர் நம்மை கவனித்துக் கொண்டிருக்கிறார். கடவுள் எந்த வேலையும் செய்வதில்லை. ஆனால், அவரின்றி ஓர் அணு கூட அசைவதில்லை.என்றுமே வற்றாத ஆன்மிகச் செல்வ வளமே நம் தேசத்தின் தனிப்பெருமை. அதைப் பாதுகாக்க வேண்டியது நம் கடமை. நேரம் ஓடிக் கொண்டேயிருக்கிறது. காலத்தை மதிக்க வேண்டியது நம் பொறுப்பு. விநாடி நேரத்தைக் கூட வீணாக்காதீர்கள். பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று வேலையைத் தள்ளிப் போடாதீர்கள். செய்ய நினைக்கும் நல்ல செயலில் உடனடியாக ஈடுபடுங்கள். மன அமைதியை ஒருபோதும் இழக்காதீர்கள். பணியில் முழுமனதோடு ஈடுபடுவது நிம்மதிக்கான வழி. வெற்றி, தோல்வி பற்றிய கவலை வேண்டாம். ஆனால், முயற்சிப்பதை மட்டும் நிரந்தர குணமாகக் கொள்ளுங்கள். எப்போதும் ஏதாவது நற்செயலில் ஈடுபடுங்கள். மனதைக் கடவுளிடமும், கைகளை வேலையினிடத்தும் கொடுங்கள். மனதில் வைராக்கியம், விவேகம் போன்ற நற்குணங்களை வளர்த்துக் கொண்டால் ஆசை என்னும் நெருப்பு அணைந்து விடும்.எல்லோரையும் மதிப்புடன் நடத்துங்கள். பிறருடன் ஒன்றிணைந்து வாழுங்கள். இதனால் ஒன்றும் குறைந்து போக மாட்டீர்கள்.பணியைக் கொண்டு உயர்வு, தாழ்வு பாராட்டாதீர்கள். நேர்மையுடன் செய்யும் எந்த வேலையும் புனிதமானதே. ஆசையற்றவனே உயர்ந்த மனிதன். அவனுடைய பாத துõளிகள் உலகையே புனிதப்படுத்தி விடும்.நல்ல ஒழுக்கம், மன அடக்கம், கருணை, இரக்கம், சேவை மனப்பான்மை போன்ற குணங்கள் நம்மை தெய்வீக நிலைக்கு உயர்த்த வல்லவை.எந்த நிலையிலும் வாய்மையை மட்டும் பேசுபவன் கடவுளுக்குரியவனாகத் திகழ்கிறான்.கடவுள் நினைப்பில் மட்டும் மனதைச் செலுத்தி, சுயநலம் இல்லாமல் அன்புடன் அனைவருக்கும் சேவை செய்து வாழ்பவன் கடவுளுக்கே சேவை செய்தவனாகிறான். மகான்களின் வாழ்க்கை வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள். அவர்களின் ஆன்மிக நுõல்களை படித்து அவற்றை பின்பற்ற முயலுங்கள். எண்ணம், பேச்சு, செயல் மூன்றிலும் துõய்மையைக் கடைபிடியுங்கள். அந்தரங்க எண்ணம் கூட பரிசுத்தமாக இருக்கட்டும். நேர்மையான வாழ்வே உலகம் முழுமைக்கும் ஆதாரமாக இருக்கிறது. அதனால், நேர்மை வழியில் வாழ்வு நடத்துங்கள். பழிக்குப் பழி வாங்கும் எண்ணத்தை வளர்த்துக் கொள்வது கூடாது. தீமை செய்தவனுக்கும் நல்லதையே எண்ணுங்கள்.நல்லதை மட்டும் எப்போதும் சிந்தியுங்கள். தீமையை அறவே புறக்கணித்து ஒதுக்குங்கள்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar