கும்பகோணம்: கும்பகோணம், மகாமக குளத்தில், ஆவணி மாத பவுர்ணமி தீர்த்த வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. கும்பகோணம் மகாமக குளத்தில், 20 வகையான தீர்த்த கிணறுகள் உள்ளன. இக்குளத்தை சுற்றி, 16 வகையான சிவலிங்கங்கள் அமைந்துள்ளன. இவற்றை ஒருங்கிணைத்து சோடச மகாலிங்கங்கள் என அழைக்கப்படுகிறது. சாந்தம் மிளிரவும், அமைதி ஒளிரவும், பகைமை அகன்று சுபிட்சம் மலரும் என்பதால், கும்பகோணம் சேக்கிழார் மன்றம் சார்பில், ஆவணி மாத பவுர்ணமி தினத்தில், மாலை, 6 மணிக்கு தீர்த்த வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது.