கன்னிவாடி : பவுர்ணமியை முன்னிட்டு தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயிலில், சிறப்பு பூஜை நடந்தது. முன்னதாக வாலை சக்தி அம்மனுக்கு மஞ்சள்நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயில், கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில், வெல்லம்பட்டி மாரிமுத்துசுவாமி கோயில், கோனூர் வீருநாகம்மன் கோயிலில் பவுர்ணமி சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.