பதிவு செய்த நாள்
11
செப்
2014
11:09
திருப்புவனம் : திருப்புவனம் அருகே மடப்புரத்தில் அருள்மிகு அடைக்கலம் காத்த அய்யனார், பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. வெள்ளி, செவ்வாய், ஞாயிற்று கிழமைகளில், ஏராளமான பக்தர்கள் வருகை தருவர். கடந்த சில நாட்களாக இக்கோயிலில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. விருதுநகர் மாவட்டம் வத்ராயிருப்பை சேர்ந்த நாடார் உறவின் முறை சங்கத்தினம் சார்பில், காளிகோயிலுக்கு 17 அடி உயரம், 8அடி அகலத்தில் தேக்கு மரத்திலான நிலைக்கதவை காணிக்கையாக வழங்கினர். நாடார் உறவின் முறை நிர்வாகி சுந்தரமூர்த்தி கூறும்போது, ஒவ்வொரு ஆண்டும் ஆவணியில், எங்கள் சங்கம் சார்பில், மடப்புரம் காளிகோயிலில் கிடாவெட்டி, பொங்கல் வைத்து வழிபடுவோம். கோயில் திருப்பணி வேலைகள் நடப்பதால் ரூ.8 லட்சம் செலவில், கதவு வழங்கியுள்ளோம், என்றார்.
தொடர்புடைய கோயில்கள் :