சிவகங்கை : சிவகங்கை சனீஸ்வரர் கோயிலில் விஸ்வபிரம்ம ஜெயந்தி விழா நடந்தது. நேற்று காலை 8 மணி முதல் 9 மணிக்குள் யாகசாலை பூஜை நடந்தது.தொடர்ந்து அபிஷேக ஆராதனை, கொடியேற்றுவிழா நடந்தது. விஸ்வகர்மா கைவினைஞர்கள் சங்க மாவட்ட தலைவர் தெய்வசிகாமணி கொடியேற்றினார். விஸ்வகர்ம சங்க நகர் தலைவர் ராமநாதன் உட்பட மாவட்ட, ஒன்றிய, நகர் நிர்வாகிகள் பங்கேற்றனர். சனீஸ்வரர் கோயில் செயலர் பாபு நன்றி கூறினார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.