பதிவு செய்த நாள்
23
செப்
2014
11:09
விருத்தாசலம்: பிரதோஷத்தையொட்டி, விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர், பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் கோவில்களில் நந்திக்கு சிறப்பு வழிபாடு நடந்தன. விருத்தாசலம் விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவிலில், நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது. இதையொட்டி, காலை ஆழத்து விநாயகர், விருத்தகிரீஸ்வரர், தாயார், சுப்ரமணியர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மாலை 4:30 மணியளவில் நந்தி பகவானுக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள் போன்ற 12 சிறப்பு பொருட்களால் சிறப்பு அபிஷேகம், அருகம்புல் மாலைகள் சாற்றி, மகா தீபாராதனை நடந்தது. பெண்ணாடம்: அழகிய காதலியம்மன் உடனுறை பிரளயகாலேஸ்வரர் கோவிலில், பிரதோஷ வழிபாடு நடந்தது. மாலை 5:00 மணியளவில், பிரகாரத்தில் உள்ள நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.