Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news விஸ்வபிரம்மா சுவாமிக்கு ஜெயந்தி ... பழமை மாறாமல் நீராழி மண்டபம்: புனரமைக்க நடவடிக்கை தேவை! பழமை மாறாமல் நீராழி மண்டபம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநியில் நாளை நவராத்திரிவிழா: காப்பு கட்டுதலுடன் துவக்கம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

23 செப்
2014
12:09

பழநி : பழநி மலைக்கோயில் மற்றும் உபகோயில்களில் நவராத்திரி விழா நாளை காப்புகட்டுதலுடன் துவங்குகிறது.. இவ்வாண்டு பழநியில் நவராத்திரி விழா செப்., 24 முதல் அக்., 4 வரை நடக்கிறது. இதை முன்னிட்டு, பெரியநாயகியம்மன் கோயிலில் காலை 10 மணிக்கு மேல் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, காப்பு கட்டுதல் நடக்கிறது. கோயில் யானை கஸ்தூரிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து காப்பு கட்டப்படும். உச்சிகாலபூஜை வேளையில் திருஆவினன்குடி கோயிலும், மலைக்கோயிலில் சண்முகர், வள்ளி,தெய்வானை மற்றும் துவாரபாலகர்களுக்கு காப்புகட்டுதல் நடக்கிறது. போகர் ஜீவசமாதியில் காலை 10 மணி காப்புகட்டுதல் நடக்கிறது. புவனேஸ்வரி அம்மன் புலிப்பாணி ஆஸ்ரமத்திற்கு எழுந்தருள உள்ளார். பெரியநாயகியம்மன் கோயிலில் விழாநாட்களில் மாலை 6 மணிக்கு நாள்தோறும் அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனை நடக்கிறது. கொழு அமைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்து, பிரசாதம் வழங்கப்படுகிறது.

அம்புபோடுதல் நிகழ்ச்சி: அக்.,3ல் நவராத்திரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான, அம்பு, வில் போட்டு, வன்னிகாசூரவதம் செய்தல் நடக்கிறது. மாலை 5 மணிக்குமேல் தங்ககுதிரை வாகனத்தில் முத்துக்குமார சுவாமி புறப்பட்டு கோதைமங்கலம் சென்று அம்புபோடுதல், வன்னிகாசூரன் வதம் நடக்கிறது. விழா நடைபெறும், ஒன்பது நாட்களிலும் மாலையில் பக்திசொற்பொழிவு, நாதஸ்வரம், பக்தி இன்னிசை, பரதநாட்டியம் போன்ற கலைநிகழ்ச்சிகள் பெரியநாயகியம்மன் கோயிலில் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர்(பொ) ராஜமாணிக்கம், உதவி ஆணையர் மேனகா செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்திரமேரூர்: பெருநகர், பிரம்ம புரீஸ்வரர் கோவிலில் தைப்பூச விழாவையொட்டி, 63 நாயன் மார்கள் உத்சவம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச திருவிழாவையொட்டி, திருக்கல்யாணம் உற்சவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், திரூர் அருகே திருநாவாயா நாவாமுகுந்தர் கோவில் மஹாமக ... மேலும்
 
temple news
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பெரியநாயகி அம்மன் கோயிலில் ... மேலும்
 
temple news
சிவகங்கை: காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர், சொர்ணவல்லி அம்பாள் கோயில் தைப்பூச விழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar