உடுமலை : கணக்கம்பாளையம் ராஜகணபதி கோவில், மண்டலாபிேஷக நிறைவு நாள் விழா நடந்தது. உடுமலை, கணக்கம்பாளையம், சிந்து நகர், ஸ்ரீராம் நகரில் அமைந்துள்ளது ராஜகணபதி கோவில். இக்கோவில் புதுப்பிக்கப்பட்டு, கடந்த ஆக., 13ம் தேதி கும்பாபிேஷகம் செய்யப்பட்டது. கும்பாபிேஷகத்தை தொடர்ந்து, தினமும் மாலை 6.30 மணிக்கு, மண்டல பூஜை நடந்தது. மண்டல பூஜை நிறைவு நாள் விழா நேற்று நடந்தது. கோவில் நிர்வாகிகள் நேற்று காலை திருமூர்த்திமலைக்கு சென்று, தீர்த்தம் கொண்டு வந்தனர். மாலை வேள்வி, சங்கு பூஜைகள் நடந்தன. இரவு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது.