பதிவு செய்த நாள்
01
அக்
2014
12:10
ஆர்.எஸ்.மங்கலம் : செங்குடி தூய மிக்கேல் அதிதூதர் ஆலய விழா செப்., 20 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று முதல் நவநாள் திருப்பலியும். நற்கருனை ஆராதனையும் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி விழா நடந்தது. மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் திருஇருதய ஆண்டவர், ஆரோக்கியமாதா, அருளாணந்தர், மிக்கேல்அதிதூதர் ஆகியோர் முக்கிய வீதிகள் வழியாக உலா வந்தனர். திருவிழா திருப்பலியை செங்குடி பாதிரியார் சாமுஇதயன் நிகழ்த்தினார். மாலையில் கொடியிறக்க நாள் தேர்பவனி விழா நடந்தது. அதைத்தொடர்ந்து கொடியிறக்கம் செய்யப்பட்டதுடன் விழா நிறைவடைந்தது. விழாவில் கிராமத்தலைவர் சேவியர்ராஜ், செயலாளர் ஆரோக்கியமோரீஸ், பொருளாளர் சேவியர், ஆசிரியர்கள் ஆரோக்கியசாமி, ஆரோக்கியசகாயதாஸ், தனபாலன், பாபுசெல்வராஜ், அருள்ஜான்பிரிட்டோ, கருணாகரன், ஜோதி, சிவகங்கை ராஜ் இந்தியா ஆட்டோ மொபைல்ஸ் மிக்கேல்ராஜ், ஊராட்சிதலைவர்செங்கோல், தாஜ்மஹால் பேக்கரி அஜ்மீர்கான், ஜே.ஜே.கேபிள் சர்வீஸ் ஜான், மிக்கேல்மாறன், பங்கராஜ்மரியமதலை, இன்டியன் மற்றும் சர்வோ ஆயில் டீலர் ஜார்ஜ் மற்றும் இளைஞர் மன்றத்தினர் கலந்துகொண்டனர்.