வத்திராயிருப்பு : வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோயில் தேரோட்ட விழாவிற்கான துவக்க வைபவமான மதுப்பொங்கல் விழா நேற்று நடந்தது. இப்பகுதி மக்களிடையே மிகவும் பிரசித்தி பெற்றது முத்தாலம்மன் கோயில் தேரோட்ட விழா. இதன் துவக்க விழாவாக மதுப்பொங்கல் விழா நடைபெறும். ஊரின் வடக்கு எல்லையில் அமைந்துள்ள வடக்குவாசற் செல்லாயி அம்மனுக்கு பொங்கல் வழிபாடு செய்து இரவு பிரசன்னம் பார்க்கும் வைபவம் நடைபெறும். வரும் ஆண்டு வளமானதாக இருக்குமா, அல்லது வறட்சியாக இருக்குமா என்பதை பிரசன்னம் பார்ப்பதன் மூலம் ஊர் மக்களுக்கு அறிவிக்கப்படும். பாரம்பரியம் மிக்க இந்த விழா நேற்று நடந்தது. பெண்கள் கோயில் முன்பாக பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். மாலையில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தணீ. சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் வழிபட்டனர். இரவு பிரசன்னம் பார்க்கும் வைபவம் ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் நடந்தது. நடு இரவில் முத்தாலம்மன் பொங்கல் விழா பறைசாற்றும் வைபவம் நடந்தது. இதை தொடர்ந்து முத்தாலம்மன் கோயில் தேரோட்ட விழா கலைவிழா கலக்டர் ஹரிஹரன் தலைமையில் சாதி, மத நல்லிணக்க ஒருமைப்பாட்டு உறுதிமொழியுடன், இன்று துவங்குகிறது.