பதிவு செய்த நாள்
01
அக்
2014
12:10
திருவள்ளூர் : திருவள்ளூர், வீரராகவ பெருமாள், நவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு, முத்தங்கி சேவையில் அருள்பாலித்தார். திருவள்ளூர், வீரராகவ பெருமாள் கோவிலில், நவராத்திரி உற்சவம், கடந்த 25ம் தேதி துவங்கியது. தினசரி, உற்சவர் வீரராகவர் மற்றும் கனகவல்லி தாயாருக்கு, மதியம் 2:00 மணிக்கு, திருமஞ்சனம் நடக்கிறது. இரவு 7:00 மணிக்கு, பத்தி உலா நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து, வீரராகவ பெருமாள், கனகவல்லி தாயாருடன், தினமும், வெவ்வேறு அலங்காரத்தில், உள்புறப்பாடு வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.நேற்று முன்தினம், தாயாருடன் உற்சவர் வீரராகவ பெருமாள், முத்தங்கி சேவையில் அருள்பாலித்தார். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.