ராஜபாளையம்: ராஜபாளையத்தில் விஜதசமியை முன்னிட்டு கிருஹிணி அமைப்பு சார்பில் சிங்கராஜாக்கோட்டை கோதண்டராமசுவாமி கோயிலில் எழுத்தறிவிக்கும், அக்ஷரஅப்யாஸ் நிகழ்ச்சி நடந்தது. கோயிலில் குழந்தைகளுடன் பெற்றோர் உட்கார வைக்கப்பட்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் உமாசந்திர மகேஸ்வரி, பஜனை பாடல்கள் பாடினார். அதனை பெற்றோர், குழந்தைகள் பாடினர். குற்றாலம் சுவாமி விவேகானந்தா ஆசிரம பூஜ்யசுவாமி அகலானந்தா, சங்கரன்கோவில் ஆஞ்சநேயர் ஆசிரம பூஜ்யசுவாமி ராகவானந்தா, விளாத்திகுளம் வேதாந்த மடம் அத்வைதானந்தா குழந்தைகளுக்கு எழுத்தறிவித்தனர். குழந்தைகள் நாக்கில் தேன் வைத்து, பச்சரியில் எழுத வைத்து ஆசி வழங்கினர். இதில் 70 குழந்தைகள் கலந்துகொண்டன. கிருஹிணி நிர்வாகி அமுதா நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கிருஹிணி அமைப்பின் குடும்பத்தினர், கோதண்டராமசுவாமி கோயில் நிர்வாகத்தினர், சிங்கராஜாகோட்டை நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.