தேவாரம் அருகே அம்பரப்பர் மலையை ஐந்து கிராம மக்கள் கடவுளாக வழிபடுகின்றனர். மலை உச்சியில் அமைக்கப்பட்டுள்ள கல் துõணில் ஏற்றப்படும் விளக்கு திருவிழா நடக்கும் நாட்களில் அணையாமல் இருப்பதற்காக காற்றின் வேகத்தை இப்பகுதியில் வசிக்கும் கம்பளத்து நாயக்கர்கள் ஆன்மிக சக்தியால் கட்டுப்படுத்தப்படுவதாக ஐதீகம் உள்ளது. அம்பரப்பர்(பெருமாள்) இப்பகுதி மக்களின் கால்நடைகள், விவசாயத்தை காப்பதாக ஐதீகம் உள்ளது. இதற்கு பிரதி பலனாக ஒவ்வொரு பங்குனியிலும் பொட்டிப்புரம், சின்னபொட்டிபுரம், ராமகிருஷ்ணாபுரம், குப்பனாசாரிபட்டி, டி.புதுக்கோட்டையை சேர்ந்த மக்கள் இணைந்து திருவிழா கொண்டாடுகின்றனர். டி.புதுக்கோட்டையில் உள்ள கோயில் பூஜாரி தொட்டமுத்து வீட்டில் இருந்து, அம்பரப்பரின் ஐம்பொன் உற்சவ மூர்த்தி சின்னபொட்டிப்புரத்தில் உள்ள கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டு வழிபாடு நடத்தப் படுகிறது. கோயிலில் இருந்து புறப்படும் உற்சவரை ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள சப்பரத்திலேற்றி, அம்பரப்பர் மலையடிவாரத்தில் உள்ள குடில் கோயிலுக்கு கொண்டு செல்லப்படுகிறார். போதை தைல புல்லால் வடிவமைக்கப்பட்ட குடிலில் வைத்து வழிபாடுநடத்துகின்றனர். திருவிழா நடக்கும் நாட்களில் பெருமாளாக வழிபடப்படும், அம்பரப்பர் மலை உச்சியில் உள்ள கல் துõணில் உள்ள விளக்கில் தீபம் ஏற்றப்படுகிறது. இன்றளவும் இந்த நடைமுறை உள்ளது.