திருமால் கோயில்களில் தாயாரை தரிசித்த பின்னரே பெருமாளைத் தரிசிக்கச் செல்ல வேண்டும். தாயார் சந்நிதி இல்லாத கோயில்களில் பெருமாளின் மார்பில் இருக்கும் தாயாரை வணங்கிய பிறகே, பெருமாளை வணங்க வேண்டும். திருமாலின் மார்பில் அணிந்துள்ள ஸ்ரீவத்ஸம் என்னும் அணிகலனில் வீற்றிருக்கும் லட்சுமிக்கு யோகலட்சுமி என்று பெயர். திருப்பதி ஏழுமலையானுக்கு அலங்காரம் செய்யும் போது, முதலில் மார்பில் வாசம் செய்யும் லட்சுமிக்கு அலங்காரம் செய்ய வேண்டும் என்ற நியதியை வகுத்தவர் ராமானுஜர். கருவறையில் பெருமாளுடன் சேர்ந்து காட்சி தரும் தாயாருக்கு போகலட்சுமி என்று பெயர். ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய இருவருமே போகலட்சுமிகள் தான். இதுதவிர, தனி சந்நிதியில் வீற்றிருக்கும் தாயாரை வீரலட்சுமி என்பர்.