நாகரிகப் பெயராக இருக்கிறதே! இதற்கும்ஆன்மிகத்திற்கும் என்ன சம்பந்தம் என்று யோசிக்கிறீர்களா? சிவன் கோயில்களில் அவரதுபக்தரான சண்டிகேஸ்வரர், தனிசன்னதியில் சிவனை எண்ணி தியானித்துக் கொண்டிருப்பார். மதுரை உள்ளிட்ட சில சிவன் கோயில்களிலுள்ள அம்பாள் சந்நிதியில் ஒரு பெண் தியானத்தில் இருப்பாள். இவளை சண்டிகேஸ்வரி என்றும், சண்டிகேஸ்வரரின் மனைவி என்றும் சொல்வார்கள். உண்மையில் அவள் சண்டிகேஸ்வரி அல்ல. இவளது பெயர் யாமினி. அம்பாள் பக்தையான யாமினி, அம்பிகையை எப்போதும் தியானித்துக் கொண்டிருக்கிறார்கள். அம்பாளை வணங்குபவர்கள் இவளையும் வணங்கினால் தான் கோயிலுக்குச் சென்றபலன் கிடைக்கும்.