நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள், தமது இறுதிக்காலத்தின்போது கடுமையாக நோய் வாய்ப்பட்டார்கள். நோய்க்கால பராமரிப்பிற்காக தமது துணைவியார் ஆயிஷா அம்மையாரின் இல்லத்திற்கு சென்றார்கள். அவர்களுக்கு நான்கு மனைவியர் உண்டு. மற்ற மூவரும், தனது இல்லத்திலேயே தங்க அம்மையார் அவர்கள் அனுமதியளித்திருந்தார்கள். இது அவர்களது உயர்ந்த பண்பைக் காட்டியது.நோயின் கடுமை அதிகமான போது, அண்ணலார் ஒரு தகவலைச் சொன்னார்கள்.அந்தத் தகவல் இதுதான்.ஒருமுறை கைபர் பகுதியைச் சேர்ந்த ஒரு யூதப்பெண், நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்கு, ஆட்டிறைச்சியை அன்பளிப்பாக வழங்கினாள். நாயகம் அவர்களும், அவருடன் சென்ற பிஷ்ர்இப்னு அவர்களும் அதைச் சாப்பிட்டனர். சாப்பிடும் போதே, நாயகம் தனது கையை உயர்த்தி, இந்த உணவில் விஷம் கலந்திருக்கிறது, எனச் சொன்னார்கள். சாப்பிட்டுக்கொண்டிருந்த பிஷ்ர்இப்னு இறந்துவிட்டார்.அந்த பெண்ணை அழைத்த நாயகம்(ஸல்) அவர்கள், ஏன் இப்படி செய்தாய்? எனக் கேட்டார்கள். அதற்கு அந்த பெண், நீர் இறைவனின் துõதர் என சொல்லி வருகிறீர். அது உண்மையாக இருந்தால் இந்த விஷ உணவு உம்மை ஏதும் செய்யாது என்று நான் நம்பினேன். அதன் காரணமாக இதை உமக்குத் தந்தேன், என்றாள்.இதன் பிறகு நாயகத்தின் தோழர்கள் அந்த பெண்ணை கொன்றுவிடலாமா? எனக் கேட்டனர். அதற்கு நாயகம்(ஸல்) அவர்கள் மறுத்து விட்டார்கள். விஷம் வைத்துக் கொல்ல முயன்றவருக்கும் கருணை காட்டிய வள்ளலாக அவர்கள் திகழ்ந்தார்கள்.