காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் பச்சையப்பன் சாலையில் உள்ள கர்ண விநாயகர் கோவில் பாலாலயம் நேற்று காலை நடந்தது. காஞ்சிபுரம் மூங்கில் மண்டபம் அருகில், பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட பழமையான கர்ண விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவில் குமரகோட்டம் முருகன் கோவில் உப கோவிலாக இருந்து வருகிறது. இதன் திருப்பணிக்கான பாலாலய பூஜை, நேற்று அதிகாலை 4:00 மணிக்கு நடந்தது. வருவாய் இல்லாமல் பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் இருந்து வந்தது.இந்நிலையில் தனியார் பங்களிப்பில், 1.5 லட்சம் ரூபாய் செலவில் இந்த பணி நடக்கவுள்ளது.