Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சென்னை ராமகிருஷ்ண மடத்தில் அகில ... சிவலோகநாதர் கோவிலில் சிறப்பு பூஜை! சிவலோகநாதர் கோவிலில் சிறப்பு பூஜை!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரம் கோயில் கோடி தீர்த்தம் முறைகேடு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

18 அக்
2014
11:10

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ‘கோடி தீர்த்தம்’ பாட்டிலை பக்தர்களிடம், கூடுதல் விலைக்கு விற்று முறைகேடு நடப்பதாக இந்து முன்னணியினர் குற்றம்சாட்டியுள்ளனர். ராமேஸ்வரம் கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களில், கடைசி தீர்த்தமான கோடி தீர்த்தம் பல சிறப்பு அம்சங்களை கொண்டது. புனிதமான கோடி தீர்த்தத்தில் சுவாமி, அம்மனுக்கு அபிஷேகம் செய்து பூஜிப்பதால், கோயிலுக்குள் நீராடும் பக்தர்கள் கோடி தீர்த்தத்தை கேட்டு வாங்கி செல்வர். இதற்காக கோயில் நிர்வாகம், கோடி தீர்த்தம் அடங்கிய (500 மி.லி) பாட்டிலை 20 ரூபாய்க்கு விற்கிறது. கோயில் நிர்வாகத்தின் அலட்சியத்தால், தன்னிச்சையாக செயல்பட துவங்கிய ஊழியர்கள், ஒரு பாட்டிலுக்கு கூடுதலாக 5 முதல் 10 ரூபாய் வரை விற்றுவருகின்றனர்.

மேலும் வாகன நிறுத்துமிடத்தில் கட்டண வசூலை தனியாருக்கு வழங்க கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இவற்றை கண்டித்து ராமேஸ்வரத்தில் இந்து முன்னணியினர் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். மாவட்ட இந்து முன்னணி செயலாளர் ராமமூர்த்தி கூறியதாவது:பக்தர்களிடம் பணம் பறிப்பதில் நிர்வாகம் முக்கியத்துவம் கொடுக்கிறது. கோடி தீர்த்த பாட்டிலை கூடுதலாக விற்று முறைகேடு நடக்கிறது. வாகன நிறுத்துமிடத்தை தனியாருக்கு ஏலம் விட்டால், பக்தர்களிடம் கூடுதல் கட்டணம் கேட்டு மிரட்டுவர். இதுகுறித்து அறநிலையத்துறை கமிஷனருக்கு புகார் செய்துள்ளேன், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்,  காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்திவரதர் குளத்தில் ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் இன்று பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.திருத்தணி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் மாசி பிரம்மோத்சவ விழா, இன்று காலை கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்; தியாகராஜ சுவாமி கோவிலில், மாசி பிரமோத்சவ பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar