பதிவு செய்த நாள்
28
அக்
2014
11:10
நாமக்கல்: பாலதண்டாயுதபாணி ஸ்வாமி கோவிலில், கந்த சஷ்டி சூரசம்ஹாரம் மற்றும் கல்யாண உற்சவ விழா, நாளை (அக்., 29) கோலாகலமாக நடக்கிறது.நாமக்கல்-மோகனூர் சாலையில், பிரசித்தி பெற்ற பாலதண்டாயுதபாணி ஸ்வாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் கந்தசஷ்டி சூரசம்ஹாரம் மற்றும் கல்யாண உற்சவ விழா கோலாகலமாக நடப்பது வழக்கம்.இந்தாண்டு விழா, நாளை (அக்., 29) காலை, 6.30 மணிக்கு கணபதி பூஜையுடன் துவங்குகிறது. 8 மணிக்கு, ஓம்சக்தி மற்றும் சுப்ரமணியர் ஹோமம், சக்திவேல் பூஜையும், 8.30 மணிக்கு, பாலதண்டாயுதபாணி ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகமும் நடக்கிறது.காலை, 10 மணிக்கு, மகா தீபாராதனை, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை, 6 மணிக்கு, ஸ்வாமிக்கு சிறப்பு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. இரவு, 7 மணிக்கு முருகப்பெருமான சூரசம்ஹாரத்துக்கு புறப்படுதல், மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 30ம் தேதி, மாலை, 6.30 மணி முதல், இரவு, 7.30 மணி வரை கல்யாண உற்சவம் கோலாகலமாக நடக்கிறது. இரவு 8 மணிக்கு, சுப்ரமணியர், வள்ளி, தெய்வானை சமேதராக எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.