பதிவு செய்த நாள்
29
அக்
2014
12:10
காரைக்குடி : குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயில் கந்த சஷ்டி விழா கடந்த 24-ம் தேதி லட்சார்ச்சனையுடன் தொடங்கியது. விழா நாட்களில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று நடக்கிறது. இதை தொடர்ந்து மதியம் 1.30 மணிக்கு மலையிலிருந்து வேல் இறங்கும் நிகழ்ச்சியும், மாலை 4 மணிக்கு சண்முகநாத பெருமான், அன்னை சக்தியிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. தொடர்ந்து வேலுடன் சண்முநாத பெருமான் திருவீதி உலா வருகிறார். மாலை 6 மணிக்கு சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி சன்னதி வாசல் முன்பு நடக்கிறது.சூரசம்ஹாரம் முடிந்து, சுவாமி மலைக்கு சென்றபின், இரவு 8 மணிக்கு இளநீர், பால், பஞ்சாமிர்தம், திரவியம், விபூதி, பன்னீர், தயிர் அபிஷேகம் நடக்கிறது. நாளை, இரவு 7 மணிக்கு திருக்கல்யாணமும், சுவாமி தங்கரதத்தில் வீதி உலா நிகழ்ச்சியும் நடக்கிறது. ஏற்பாடுகளை பொன்னம்பல அடிகளார் செய்து வருகிறார்.