பதிவு செய்த நாள்
29
அக்
2014
12:10
விருத்தாசலம்: விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவிலில், சூரசம்ஹார நாளையொட்டி இன்று சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கிறது. விருத்தசலம், மணவாளநல்லுõர் கொளஞ்சியப்பர் கோவிலில், சஷ்டி உற்சவ விழா கடந்த 24ம் தேதி துவங்கியது. அதையொட்டி விநாயகர், கொளஞ்சியப்பர் சுவமிகளுக்கு சந்தனம், இளநீர், பன்னீர் போன்ற வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனை, சந்தனகாப்பு அலங்காரம் நடந்தது. தினமும் காலை சிறப்பு அபிஷேக ஆராதனை, மாலை அர்ச்சகர்கள் 1,008 போற்றிகள் பாடி, சண்முக அர்ச்சனை நடந்தது வ ருகிறது. ஐந்தாம் நாளான நேற்று சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இன்று சூர சம்ஹார நாளையொட்டி சிறப்பு அபிஷேக ஆராதனை, சுவாமிகள் வீதியுலா நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அலுவலர் கொளஞ்சி, மேலாளர் குருநாதன் செய்துள்ளனர்.