பதிவு செய்த நாள்
07
நவ
2014
12:11
செஞ்சி: செஞ்சி அன்னை பவதாரிணி நகர் சித்தாஸ்ரம ஏகாம்பரேஸ்வரருக்கு ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேகம் நடந்தது. செஞ்சி சிறுகடம்பூர் அன்னை ஓம் பவதாரிணி நகரில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் பகவான் யோகி ராம் சுரத்குமாரின் 96வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு வாஞ்சா லலிதா திரிபுரசுந்தரிக்கு 36 நாள் சகஸ்ரநாம கோடி அர்ச்சனை வைபவம் நடந்து வருகிறது. நேற்று ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு மாலை 6 மணிக்கு ஏகாம்பரேஸ்வரருக்கு அன்னாபிஷேகம் செய் தனர். காமாட்சியம்மனுக்கு லலிதா சகஸ்வர நாம அர்ச்சனையும், கருமாரியம்மனுக்கு நவசக்தி பூஜையும் நடந்தது. அன்னை ஓம் பவதாரிணி முன்னிலையில் சிவாச்சாரியார்கள் பூஜைகளை நடத்தினர். தொழிலதிபர்கள் கோபிநாத், ராம்குமார், உபயதாரர் சரவணன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி சிதம்பரேஸ்வரர் கோவிலில் ேநற்று காலை பஞ்மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலையில் சிவலிங்கம் முழுவதும் அன்னம் சாற்றப்பட்டு அலங்காரம் செய்தனர். பவுர்ணமி தினம் என்பதால் சிவகாமி அம்மனுக்கும் அபிஷேகம் செய்து சிறப்பு அலங்காரம் செய்தனர். தென்கீரனுார் அருணாசலேஸ்வரர், ஏமப்பேர் விஸ்வநாதேஸ்வரர், சின்னசேலம் தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர், கங்காதீஸ்வரர், வடக்கனந்தல் உமாமகேஸ்வரர், ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர், நீலமங்கலம் ஏகாம்பரேஸ்வரர், முடியனுார் அரு ணாச்சலேஸ்வரர், வரஞ்சரம் பசுபதீஸ்வரர், சாமியார் மடம் செம்பொற்ஜோதிநாதர் ஆகிய சிவன் கோவில்களில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அன்னத்தால் அலங்காரம் செய்து பூஜைகள் நடந்தது.