பதிவு செய்த நாள்
07
நவ
2014
12:11
காளஹஸ்தி : காளஹஸ்தி சிவன் கோவிலில், தெலுங்கு மாத கார்த்திகை பவுர்ணமியை முன்னிட்டு, லட்ச சிவலிங்க அர்ச்சனை நடந்தது. தென்கயிலாயமாக விளங்கும், காளஹஸ்தி சிவன் கோவிலில், நேற்று தெலுங்கு மாத கார்த்திகை பவுர்ணமியை முன்னிட்டு, தனியார் பள்ளியில் மேடை அமைக்கப்பட்டு, லட்ச சிவலிங்க அர்ச்சனை நடந்தது. வழக்கமாக, லட்ச ஜோதிர் லிங்க அர்ச்சனை தான் நடத்தப்படும். இந்த முறை, புற்று மணலால், ஒரு லட்சத்து எட்டு லிங்கங்கள் செய்யப்பட்டு, நேற்று சிவலிங்கத்திற்கு பால், இளநீர், மஞ்சள், சந்தனம் போன்றவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின், மாலை, லிங்க அர்ச்சனை, லட்ச தீப அர்ச்சனை, மந்திர புஷ்ப அர்ச்சனை போன்ற சிறப்பு புஜைகள் நடத்தப்பட்டன. இறுதியாக, சிவ லிங்கங்கள், நான்கு மாட வீதி வழியாக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. இந்த விழாவில், நகரி எம்.எல்.ஏ., நடிகை ரோஜா உட்பட, ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.