சபரிமலை செல்லும் பக்தர்கள் கார்த்திகை மாதம் 1ம் தேதி மாலை அணிவது வழக்கம். இந்த நாளில் மாலை அணிய முடியாவிட்டால், சனிக்கிழமை அல்லது உத்திர நட்சத்திர நாளில் மாலை அணிந்து விரதம் ஆரம்பிக்கலாம். கோயில் அர்ச்சகர் அல்லது குருசாமி கையினால் மாலை அணிந் துகொள்ள வேண்டும். மாலை அணிந்த கோயிலை வலம்வந்து தேங்காய் உடைத்து சுவாமிகளை வணங்க வேண்டும். ருத்திராட்ச மாலையோ, துளசி மணி மாலையோ அணியலாம். 41 நாட்கள் விரதம் இருப்பது மேன்மையானது. கருப்பு அல்லது நீல ஆடையை அணிந்துகொள்ள வேண்டும். செருப்பு அணியக்கூடாது. கட்டில், மெத்தையில் தூங்கக்கூடாது. தலையணை பயன்படுத்தக் கூடாது. மாமிசம் மற்றும் மதுபானம் கூடாது. மற்றவர்களுக்கு தீங்கு உண்டாக்கக்கூடிய செயல்களை செய்தல், பொய் சொல்லுதல், ஆசை கொள்ளுதல், தாம்பத்யம் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.