பரமாத்மாவை நோக்கி .. சபரிமலைக்கு நெய் தேங்காய் கொண்டு செல்வது எதற்காக?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20நவ 2023 12:11
தேங்காய் என்பது நம் உடம்பு, நெய் என்பது நம் ஆத்மா. தேங்காயில் நெய் நிரப்பி இருமுடியில் வைத்து, படியேறி பகவானை தரிசனம் செய்து, பின்னர் நம் குருசுவாமியின் கையால் அந்த தேங்காயை உடைத்து நெய் அபிஷேகம் செய்யும்போது, நாம் பரமாத்மாவை நோக்கி ஒரு படி மேல் நோக்கி செல்கிறோம். இதுதான் நெய் தேங்காயின் தத்துவம்.
நெய் அபிஷேகம் செய்வதன் மகிமை; மனித இதயத்தை தசைநார்கள் சூழ்ந்துள்ளதைப் போல, நார்களால் சூழப்பட்ட தேங்காயைப் பக்தன் தேர்ந்தெடுக்கிறான். அவனது இதயத்தில் உள்ள களங்கமான எண்ணங்களை தேங்காயில் உள்ள நீருக்கு ஒப்பிடலாம். தேங்காயில் துவாரமிட்டு அதை வெளியேற்றி, நவநீதம் என்னும் சுத்தமான எண்ணங்களை பசு நெய்யாக உள்ளே ஊற்றுகிறான். தேங்காயின் துளையை அடைத்து ஐயப்பனின் திருவடியை மனதில் நினைத்து தலையில் வைக்கிறான். பக்தியுடன் சரணம் கூறி சுமந்து செல்கிறான். நெய்யை ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்கிறான். அதாவது, தனது உள்ளத்தில் உள்ள ஆழ்ந்த பக்தியை ஐயப்பனுக்கு காணிக்கையாக்குகிறான். இதன் காரணமாக ஜென்ம சாபல்யம் பெற்ற ஆனந்தம் அடைகிறான்.