பதிவு செய்த நாள்
19
நவ
2014
12:11
சபரிமலை சீசனையொட்டி, தமிழகத்தில் இருந்து, பம்பை, குமுளிக்கு, 40 சிறப்பு பஸ்களை, அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் இயக்க உள்ளது. வரும், ஜன., 20ம் தேதி வரை, இயக்கப்படும். சென்னை, கடலூர், திருச்சி, மதுரை, செங்கோட்டை, தூத்துக்குடி ஆகிய இடங்களில் இருந்து, பம்பைக்கும், சென்னை, புதுச்சேரி, தஞ்சாவூர், கும்பகோணம், நாகப்பட்டினம், சேலம், கோவை ஆகிய ஊர்களில் இருந்து, குமுளிக்கும் சிறப்பு பஸ்கள் சென்று வரும். சென்னையில் இருந்து நேற்று, ஆறு பஸ்கள் சபரிமலைக்கு இயக்கப்பட்டன. பஸ்களில் பயணம் செய்ய இருக்கைகளை முன்பதிவும் செய்து கொள்ளலாம். இணையதளத்தில், முன்பதிவு செய்ய, www.tnstc.in என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். ஒப்பந்த அடிப்படையில் பஸ்களை இயக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது.