பதிவு செய்த நாள்
02
டிச
2014
12:12
போளிவாக்கம்: போளிவாக்கத்தில் உள்ள சங்கரநாராயண கோவிலில், நேற்று, மகா கும்பாபிஷேகம் நடந்தது. கடம்பத்துார் ஒன்றியம், போளிவாக்கம், கோமதி நகரில் உள்ளது கோமதி அம்மன் சமேத சங்கரநாராயணன் கோவில். இந்த கோவிலில், கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கடந்த 29ம் தேதி, காலை 8:30 மணிக்கு, கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. தொடர்ந்து சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் அதன்பின், மாலை 6:00 மணிக்கு, முதல் கால யாகசாலை பூஜை நடந்தது. நேற்று முன்தினம், காலை 9:00 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜையும், அதை தொடர்ந்து 10:00 மணிக்கு மகா தீபாராதனையும், மாலை 6:00 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜையும் நடந்தது. நேற்று, காலை 6:00 மணிக்கு, நான்காம் கால யாகசாலை பூஜையும், காலை 9:30 மணிக்கு கோபுர கலசங்களுக்கு, புனித நீர் ஊற்றப்பட்டு, மகா கும்பாபிஷேகம் நடந்தது.