காஞ்சிபுரம்: கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு, காஞ்சிபுரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு மூன்று நாட்கள், 75 சிறப்பு பேருந்துகளை காஞ்சி புரம் போக்குவரத்து மண்டலம் இயக்குகிறது.திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த மாதம் 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும், 5ம் தேதி அண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. மறுநாள் பவுர்ணமி என்பதால், காஞ்சிபுரத்திலிருந்து, 75 சிறப்பு பேருந்துகளை திருவண்ணாமலைக்கு இயக்க காஞ்சிபுரம் அரசு போக்குவரத்து மண்டலம் முடிவு செய்துள்ளது. காஞ்சிபுரம் - திருவண்ணாமலை இடையே, வருகிற 4ம் தேதி முதல் 6ம் தேதி வரை, சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என, போக்குவரத்து வட்டாரங் கள் தெரிவித்தன.