பதிவு செய்த நாள்
02
டிச
2014
12:12
காரிமங்கலம்: காரிமங்கலம், மலைக்கோவிலில் கார்த்திகை தீப திருவிழா வரும் 5ம் தேதி நடக்கிறது. காரிமங்கலம், ஸ்ரீ அபித குஜாம்பாள் சமேத அருணேஸ்வரர் கோவிலில் ஆண்டு தோறும் கார்த்திகை தீப திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. வழக்கம் போல் இந்தாண்டும் கார்த்திகை தீப திருவிழா வரும், 5ம் தேதி நடக்கிறது. இதையொட்டி அதிகாலை, 4 மணிக்கு ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது. காலை 5 மணிக்கு பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 6 மணிக்கு அருகில் உள்ள மலை உச்சியில் அண்ணாமலையார் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. எம்.எல்.ஏ., அன்பழகன் தலைமை வகித்து மஹா தீபத்தை ஏற்றி வைக்கிறார். தொடர்ந்து வாணவேடிக்கை நடக்கிறது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை விழாக்குழு தலைவர் எம்.எல்.ஏ., அன்பழகன், முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவர்கள் சீனிவாசன், செந்தில்குமார், குருக்கள் புருஷோத்தமன் மற்றும் பக்தர்கள் செய்துள்ளனர்.
* காவேரிப்பட்டணம் அடுத்த, பெண்ணேஸ்வரர் மடத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வேதநாயகி சமேத பெண்ணேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு அதிகாலையில் ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது. 5 மணிக்கு பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும், மாலை 6 மணிக்கு மஹா தீபமும் ஏற்றப்படுகிறது. வாணவேடிக்கை மற்றும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் குருக்கள் மோகன்குமார் மற்றும் பொதுமக்கள், பக்தர்கள் செய்துள்ளனர்.
* தர்மபுரி கோட்டை மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவில், நெசவாளர் நகர் மகாலிங்கேஸ்வரர் கோவில், பாரதிபுரம் காசி விஸ்வநாதர் கோவில், சவுளுப்பட்டி ஆதிலிங்கேஸ்வரர் கோவில், புட்டிரெட்டிப்பட்டி சோமேஸ்வரர் கோவில், ஒகேனக்கல் தேசநாதேஸ்வரர் கோவில், பாலக்கோடு பால்வண்ண நாதர் கோவில், அடிலம் அடிலநாதர் கோவில் உட்பட அனைத்து சிவன் கோவில்களிலும் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு அதிகாலையில் பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும், மாலை 6 மணிக்கு மஹாதீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடக்கிறது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.