பதிவு செய்த நாள்
02
டிச
2014
12:12
விழுப்புரம்: கார்த்தீகை தீபத்தையொட்டி திருவண்ணாமலைக்கு அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம் மண்டலம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. கார்த்திகை தீபம் மற்றும் பவுர்ணமி கிரிவலத்தையொட்டி வரும் 5ம் தேதி திருவண்ணாமலைக்கு பக்தர்கள் சென்று வர தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம் மண்டலம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை, தாம்பரம், புதுச்சேரி, கடலுார், சிதம்பரம், விழுப்புரம், ஓசூர், பெங்களூரு, திருப்பத்துார், வேலுார், ஆரணி, செய்யாறு, காஞ்சிபுரம், வந்தவாசி, சாத்தனுார் அணை, கள்ளக்குறிச்சி, திருக்கோவி லுார், பண்ருட்டி, சேலம், திருச்சி ஆகிய வழிதடங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் வரும் 4ம் தேதி முதல் 6ம் தேதி வரை இயக்கப்படும். இந்த பஸ் நிலையங்களில் வரும் 4ம் தேதி முதல் 6ம் தேதி வரை 24 மணி நேரம் மேலாளர்கள் மற்றும் பணியாளர்கள் குழு பணியில் இருப்பர்.இவ்வாறு போக்குவரத்துக் கழக விழுப்புரம் மண்டல மேலாண் இயக்குநர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.