பதிவு செய்த நாள்
03
டிச
2014
12:12
திருத்தணி: சதாசிவலிங்கேஸ்வரர் கோவிலில், வரும், 8ம் தேதி, லட்ச தீப பெருவிழா நடைபெறுகிறது. திருத்தணி, பழைய தர்மராஜா கோவில் தெருவில் உள்ளது சதாசிவலிங்கேஸ்வரர் கோவில். இக்கோவிலில், வரும், 8ம் தேதி சனிப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு, லட்ச தீப பெருவிழா நடைபெறுகிறது. விழாவை ஓட்டி, அன்று காலை, 8:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடக்கிறது. மாலை, 6:00 மணிக்கு கோவில் வளாகத்தில், லட்ச தீப பெருவிழா நடக்கிறது. இதில், திரளான பெண்கள் கலந்து கொண்டு அகல்விளக்கு ஏற்றி வழிபடுவர்.