திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய் நல்லூர் கிருபாபுரீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. விழாவையொட்டி காலை 6:00 மணிக்கு பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேகமும், மாலை 4:00 மணிக்கு நந்திகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனை யும் நடந்தது. மாலை 6:00 மணிக்கு மங்களாம்பிகை, கிருபாபுரீஸ்வரர் தம்பதி சமேதராக அலங்கரிக்கப்பட்டு, கோவிலின் உட்பிரகாரத்தில் வலம் வந்தனர்.