Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மலைக்கோட்டையில் கார்த்திகை தீப விழா! கார்த்திகை தீப திருவிழா கோலாகலம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவன் கோவில்களில் கார்த்திகை தீப விழா!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 டிச
2014
02:12

காரிமங்கலம்:காரிமங்கலம், மலைக்கோவிலில் நடந்த கார்த்திகை தீப திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.காரிமங்கலம், அபித குஜாம்பாள் சமேத அருணேஸ்வரர் கோவிலில் ஆண்டு தோறும் கார்த்திகை தீப திருவிழா, சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. வழக்கம்போல் இந்தாண்டும் கார்த்திகை தீப திருவிழா, நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று அதிகாலை, 4 மணிக்கு ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடந்தது.
காலை, 5 மணிக்கு பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும், மாலை, 6 மணிக்கு அருகில் உள்ள மலை உச்சியில் அண்ணாமலையார் தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடந்தது. தொடர்ந்து வாண வேடிக்கையும், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது.

காவேரிப்பட்டணம் அடுத்த, பெண்ணேஸ்வரர் மடத்தில் அமைந்துள்ள வேதநாயகி சமேத பெண்ணேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு அதிகாலையில் ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடந்தது. அதிகாலை, 5 மணிக்கு பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும், மாலை, 6 மணிக்கு மஹா தீபமும் ஏற்றப்பட்டது.

தர்மபுரி கோட்டை மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவில், நெசவாளர் நகர் மகாலிங்கேஸ்வரர் கோவில், பாரதிபுரம் காசி விஸ்வநாதர் கோவில், சவுளுப்பட்டி ஆதிலிங்கேஸ்வரர் கோவில், புட்டிரெட்டிப்பட்டி சோமேஸ்வரர் கோவில், ஒகேனக்கல் தேசநாதேஸ்வரர் கோவில், பாலக்கோடு பால்வண்ண நாதர் கோவில், அடிலம் அடிலநாதர் கோவில் உட்பட அனைத்து சிவன் கோவில்களிலும், கார்த்திகை தீபத்தை முன்னிட்டு அதிகாலையில் பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும், மாலை, 6 மணிக்கு மஹாதீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வேடசந்தூர்; வேடசந்தூர் தேவிநாயக்கன்பட்டியில் ஒவ்வொரு ஆண்டும், தைப்பூசத்தை முன்னிட்டு ஊர் மக்கள் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தில் செயல்படும் பெரியநாயகி அம்மன் கோயிலில் தைப்பூச விழா நாளான ... மேலும்
 
temple news
அன்னூர்; குமரன் குன்று கல்யாண சுப்பிரமணியசாமி கோவில் தைப்பூச தேரோட்டத்தில் பல ஆயிரம் பக்தர்கள் ... மேலும்
 
temple news
காரைக்குடி; குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி நேற்று ஏராளமான ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar