திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் கீழையூர் பாலசுப்ரமணியர் கோவில்களில், கார்த்திகை தீபத்திருவிழா நடந்தது. கார்த்திகை தீபத்திருநாளான நேற்று திருக்கோவிலூர், கீழையூர், பாலசுப்ரமணியர் கோவிலில் மூலவர் வள்ளிதேவசேனா சமேத பாலசுப்ரமணியருக்கு காலை 7 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்துடன் 9:00 மணிக்கு லட்சார்ச்சனை, மகா தீபாராதனை நடந்தது. மாலை 6 :00 மணிக்கு வெள்ளி கவசத்தில் மகா தீபாராதனை நடந்தது. கோவிலில் பக்தர்கள் கலந்து கொண்டு லட்ச தீபம் ஏற்றினர். ராஜா குருக்கள் தலைமையில் நடந்த வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.