பதிவு செய்த நாள்
06
டிச
2014
02:12
சங்கராபுரம்: சங்கராபுரம் பகுதியில் பிரதோஷ விழா நடந்தது. சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலம் பாண்டுவனேஸ்வரர் கோவிலில் நடந்த விழாவிற்கு பிரதோஷ வழிபாட்டு மன்ற தலைவர் நாட்டார் ராமலிங்கம் தலைமை தாங்கினார். ரவி குருக்கள், கணபதி முன்னிலை வகித்தனர். பிரதோஷ நாயகருக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேக ஆராதனைகள், மகா தீபாராதனை நடந்தது. இதேபோல் சங்கராபுரம் அடுத்த தியாகராஜபுரம், கடுவனூர், மூக்கனூர், முதல்பாலமேடு, மஞ்சபுத்தூர், பாக்கம் ஆகிய சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.