இவரது வாரிசுகள்: இரு மனைவியரில் முதல் மனைவிக்கு ஒரு மகள் உண்டு. இவரின் வாரிசுகளே உள்ளனர்.
மகா சமாதி : 1835 தீபாவளி அன்று. தீட்சிதரின் ஆராதனை ஆண்டுதோறும் பங்குனி கார்த்திகை நட்சத்திரத்தில் ஜயந்தி விழா. தீபவாளித் திருநாளின்போது ஆராதனை விழா, இந்த விழாக்கள் எட்டயபுரம் மற்றும் இந்தியாவின் முக்கியமான இடங்களிலும் விமரிசையாக நடைபெறுகின்றன.
தலம் : எட்டயபுரம்
சிறப்பு : ஸ்ரீமுத்துஸ்வாமி தீட்சிதர் நினைவாலயம்
எங்கே இருக்கிறது: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இருந்து சுமார் 14 கி.மீ. தொலைவு. தூத்துக்குடியில் இருந்து சுமார் 45 கி.மீ. மதுரையில் இருந்து சுமார் 100 கி.மீ.
எப்படிப் போவது?: கோவில்பட்டி தூத்துக்குடி மார்க்கத்தில் இருக்கிறது எட்டயபுரம். எட்டயபுரம் பேருந்து நிலயைத்துக்கு அடுத்த கட்டடமே முத்துஸ்வாமி தீட்சிதரின் சமாதிதான். தென்மாவட்டத்தின் எந்தப் பகுதியில் இருந்தும் எட்டயபுரத்தை அடைவது எளிது. சென்னையில் இருந்து பயணிப்பவர்கள் நெல்லை தூத்துக்குடி செல்லும் ரயில்களில் பயணித்து கோவில்பட்டியில் இறங்கி அங்கிருந்து எட்டயபுரம் செல்லலாம்.
தரிசன நேரம்: காலை 5.00-2.00, மதியம்: 3.30-8.30
தொடர்புக்கு: ஸ்ரீ நாதஜோதி முத்துஸ்வாமி தீட்சிதர் மெமோரியல் கமிட்டி அப்காய் கார்டன்ஸ் சங்கர் நகர்-627 357. நெல்லை மாவட்டம்